இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியுள்ளார்.
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் 17ம் தேதி தொடங்கி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட் உடன் மோதி வெற்றி பெற்றார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சீனாவைச் சார்ந்த யூ பை சென் உடன் மோதிய சாய்னா, 2-0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரில் இருந்து
அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
சீனா வீராங்கனை யூ பை சென்னின் அதிரடியான ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடிய சாய்னா 9-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் வெறும் 32 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சொந்த நாட்டைச் சார்ந்த பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது பேட்மிண்டன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.