”மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் ” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!

மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

”இன்னும் 6 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். தனிப்பெரும்பான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டத்திற்கு இந்த ஆட்சி தடை போட முடியாது. கரூர் திமுக முப்பெரும் விழாவில் மக்கள் சாரைசாரையாக மக்கள் வெளியேறினர். மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிச்சயமாக தண்டனை வழங்கப்படும்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அதிமுக ஆட்சி வந்த உடன் இதற்கு துணையாக இருக்கும் நபர்கள் கடும் நடவடிக்கை எடுப்பேன். செந்தில்பாலாஜி மீது இருக்கும் வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக ஆட்சி. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது அதிமுக ஆட்சி. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிகமாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர் கேடு. அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து தமிழ்நாடாக இருந்து . அதிமுக ஆட்சியில் அதிகளவில் பள்ளிகளை திறக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு 77 பள்ளிகளை மூடியது. தெலுங்கானா முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்துள்ளனர். 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் பணி ஆணை வழங்கி அரசு அதிமுக அரசு.

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும். தாலிக்கு தங்கள் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை மறுக்கும் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.