லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகில் தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் தேங்கி நிற்கும் தண்ணீரில், மர்ம நபர்கள் விஷ மருந்து தெளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து, தொற்றுநோய் பரவும் அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை பேருந்து நிலையம் பகுதியில் காவிரி ஆறும் அருகில் தென்கரை பாசன வாய்க்காலும் உள்ளன. அப்பகுதியில், அதிக அளவு காவிரி ஆற்றில் மீன்கள் பிடித்து லாலாபேட்டை பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது, தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் அடைக்கப்பட்டுள்ளதால், தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவு மீன்கள் இருந்தன.
இதனை அறிந்த மர்ம நபர்கள் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வதற்காக மயக்க மருந்து தெளித்து, மீன்கள் பிடிப்பது வழக்கமாக உள்ள நிலையில் மருந்து தெளித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதனால் இதனால் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
—சௌம்யா.மோ






