நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரின் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள இல்லத்தில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி அளிக்கும்படி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அஜித் குடும்பத்தினர் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.