துப்பாக்கியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வட மாநில இளைஞர்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் போலீசிடம் துப்பாக்கியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வட மாநில இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த இடப்பழஞ்சி பகுதியை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட்டப்பகலில் போலீசிடம் துப்பாக்கியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வட மாநில இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த இடப்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் சிந்து. ஆசிரியையாக பணி புரியும் இவர் காலை தனது காரில் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார். கார் டிரைவர் சிந்துவை பள்ளியில் இறக்கி விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கேட்டுகள் திறந்து கிடந்துள்ளன. உள்ளே சென்று பார்த்தபோது வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கொள்ளையடிக்க முயன்றனர், அவர்களை தடுத்து நிறுத்திய போது இந்தி மொழியில் பேசி கொண்டு வெளியேறி, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

தொடர்ந்து இது குறித்து வஞ்சியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வஞ்சியூர் பகுதியில் உள்ள இருசக்கர உதிரி பாக கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய கொள்ளையர்கள் அங்கு இரு சக்கர வாகனத்திற்கு உதிரி பாகங்கள் கேட்டுள்ளனர், வாங்கி விட்டு திரும்பு போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதன்பிறகு, போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்றுள்ளனர்.

 

இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து திருடர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.