அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெற்ற உண்டியல் என்னும் பணியில் 93
லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 59 கிராம் தங்கம் 565 கிராம் வெள்ளி
காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்
திருவிழாவை தொடர்ந்து உண்டியல்கள் என்னும் பணி இன்று நடைபெற்றது. இதில்
உண்டியல் காணிக்கையாக 93 இலட்சத்து23 ஆயிரத்து 788 ரூபாய் ரொக்க பணமும் 59
கிராம் தங்கம் மற்றும் 565 கிராம் வெள்ளியும் காணிக்கையாக
கிடைக்கப்பெற்றுள்ளன.
108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றான அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் கடந்த மாதம் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் 12ம் தேதி திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் மற்றும் நகைகள் இன்று எண்ணப்பட்டன.
கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட இந்து சமய
அறநிலைத் துறை இணை ஆணையர் வளர்மதி மேற்பார்வையில் சமூக நல இயக்கங்களின் தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் உண்டியலை என்னும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று மாலை வரை எண்ணப்பட்ட தொகையின் அடிப்படையில் 93 லட்சத்து 23 ஆயிரத்து 788 ரூபாய் ரொக்க பணமும் 59 கிராம் தங்கம் மற்றும் 565 கிராம் வெள்ளி
பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன.
கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் அப்போது எண்ணப்பட்டபோது, ரூபாய் ஒரு கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அதேபோல் தற்போது நடைபெற்ற ஆடிப்பெருந் திருவிழாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கைகள் வரப் பெறும் என கோவிலில் நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
உண்டியல்கள் என்னும் பணி நாளையும் நடைபெறவுள்ளது.








