உணவகத்தின் மேற்கூரையை பிரித்து, புகுந்த இரண்டு இளம்பெண்கள், ஹோட்டலில்
இருந்து கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எங்கே அரங்கேறியது?.. விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சாலையில் சாந்தம் என்ற அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இரவு ஓட்டலை மூடிவிட்டு ஹோட்டல் உரிமையாளர் சென்றுள்ளார். காலையில் வழக்கம் போல் ஓட்டலை இயங்குவதற்காக ஓட்டல் திறந்து பார்த்தபோது ஹோட்டலின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஹோட்டலுக்கு உள்ளே சென்று பார்த்த போது ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையம் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதையடுத்து ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகள் ஹோட்டல் உரிமையாளரை மட்டுமின்றி, ஊழியர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
காரணம் ஹோட்டலின் மேற்கூரை பிரித்து உள்ளே புகுந்து திருடிய மர்ம நபர்கள் இரண்டு இளம் பெண்கள் என்பதுதான் ஹோட்டல் உரிமையாளரின் அதிர்ச்சிக்கு காரணம். இரண்டு இளம் பெண்கள் உடலில் ஸ்வெட்டர்களை போட்டுக்கொண்டு முகத்தை தெரியாதவகையில் முகமூடி அணிந்துள்ளனர். பின்னர் கல்லாப்பெட்டியில் பணத்தை திருட்டு சாவியைப்போட்டு திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
ஆரணி பகுதியில் கடந்த 20 நாட்களில் கோவில்கள் கடைகள் ஹோட்டல்கள் என 15 க்கும்
மேற்பட்ட இடங்களில் திருடர்கள் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து
அரங்கேறி வருகிறது. தற்போது கடைகளில் பெண்கள் முகமூடி அணிந்து திருடும் சம்பவத்தால் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதுவும் ஹோட்டல் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து இளம்பெண்கள் கைவரிசை காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து கைவரிசை காட்டிய இளம்பெண்களை தேடிவருகின்றனர்.







