தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு , தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சச்சு, லதா, சோனியா, விக்னேஷ், நந்தா, பிரேம்குமார், ஶ்ரீமன், தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன், பிரகாஷ், காளிமுத்து, வாசுதேவன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் இன்று (12.1.22) தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் திருமிகு. உதயநிதி ஸ்டாலினுக்கு,
மென்சிரிப்பே அடையாளமாய் !
கடுமுழைப்பே குறிக்கோளாய் !
மக்கள் மத்தியில் வலம் வரும்
தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அகமகிழ்ந்த வாழ்த்துகள்!
என அச்சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார்.
மேலும் தாங்கள் பொறுப்பேற்றதின் காரணமாக இளைஞர்கள் மேல்தளம் நோக்கி முன்னேறவும், விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்கப்பதக்கங்கள் குவித்திட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் செய்வர் என நம்பிக்கை பிறப்பதாகவும், தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்வளர்ச்சிக்கு ஆதரவையும் பங்களிப்பையும் நல்கும் என்ற உறுதியையும் நாசர் தனது வாழ்த்து செய்தி வாயிலாக கூறினார்.