காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி

சேலத்தில் தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா – கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு…

சேலத்தில் தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அன்னதானப்பட்டி அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா – கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 16-ஆம் தேதி, ஜீவா உயிரிழந்துள்ளார். போலீசாரிடம் கணவர் மதுபோதை அதிகமானதால் அவர் இறந்ததாக கவிதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜீவாவின் உடற்கூறு ஆய்வில், அவர் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: நாமக்கல் – முசிறி 4 வழிச்சாலை: மத்திய அரசுக்கு திமுக எம்.பி ராஜேஷ்குமார் நன்றி

இதனால், போலீசார் கவிதாவிற்கு தெரியாமல், அவரது செல்போனை கண்காணித்து வந்தனர். அதில், அவர் ராஜா என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவிதாவிடமும் ராஜாவிடமும் விசாரணை நடத்தியதில், இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது தெரியவந்தது. மேலும், தங்களின் உறவிற்கு தடையாக ஜீவா இருந்தால், அவர் மதுபோதையில் இருந்தபோது தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக இருவருமே ஒப்புக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.