நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை தொடங்குகிறது.
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் முதல் இரண்டு நாட்களை தவிர கூட்டத்தொடர் முழுவதும் மக்களவை, மாநிலங்களவை இரண்டுமே இரண்டு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் மக்களவையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு சபைகளிலும் விவாதம் நடைபெற உள்ளது.
அண்மைச் செய்தி: காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி
இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் 2 நாட்களுக்கு கேள்வி நேரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் மீண்டும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநில தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பட்ஜெட்டில் அம்மாநிலங்கள் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விவசாயிகள் சார்ந்த அறிவிப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








