தேனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரை எரித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையி0ல், இறந்தவர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர் இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி முத்துகுமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவருடைய மனைவி தனது காதலன் செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து முத்துமாரியை கைது செய்த போலீசார், செல்வராஜை நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், க.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நாகராஜ் சரணடைந்தார். பின்னர், அங்கு வந்த போலீசார், செல்வராஜை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







