முக்கியச் செய்திகள் இந்தியா

மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடி

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் நாடுமுழுவதும் கொரோனாவல் 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கும், சில மாநிங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம் பெயர் தொழிலார்கள், தினசரி கூலிகள், என பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதன் நடவடிக்கையாக பிரதமர் “கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தின் கீழ் மே, மற்றும் ஜீன் மாதங்களில் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக ரூ.26,000 கோடி நிதியை மத்திய அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: சத்தியபிரதா சாகு

Halley karthi

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

Halley karthi

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்

Gayathri Venkatesan