அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்.
ஆனால் டிரம்பின் இந்த முடிவிற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டிரம்ப் தனது சமூகவலைதளத்தில் இரண்டு ஏஐ புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலகத்தில் டிரம்ப் தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். அவர் அருகில் உள்ள வரைப்படத்தில் வெனிசுவேலா, கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இத்துடன், அந்தப் புகைப்படத்தில் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் அதிபர் டிரம்ப் பேசுவதைத் திகைப்புடன் கேட்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு படத்தில் புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது” என்று எழுதப்பட்டுள்ளது.
இறையாண்மை கொண்ட நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளாகக் குறிப்பிட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.









