பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். கடந்த 2015ல் வெளியான ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’,‘சலார்’ படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று பிரபாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ‘பௌஜி’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.