தாலிபன் உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி, முதன்முறையாக அரசு விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ஆப்கனில் பாதுகாப்புக்காக இருந்த அமெரிக்க படைகள் அனைத்தும் கடந்த ஆண்டு தங்கள் படைவீரர்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் ஆப்கனை விட்டு வெளியேறினர். இதற்கு பிறகான காலகட்டத்தில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரித்து, பின்பு ஆப்கனே தாலிபன்களின் வசம் வந்தது. இதை தொடர்ந்து ஆப்கனில் தாலிபன்களின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தாலிபன்களின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானி நடந்துவரும் தாலிபன்களின் ஆட்சியில் ஆப்கனின் உள்துறை அமைச்சராக இருந்துவருகிறார். ஆனால் ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றிய நாள் முதலே இவர் எந்த ஒரு பொது நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் காவலர்களுக்கான பயிற்சிகள் முடிந்து பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட சிராஜூதீன் ஹக்கானி முதன்முறையாக பொதுவெளியில் தனது முகத்தை காட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது செய்தி தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது.
ஆண், பெண் என மொத்தமாக 377 பேர் பட்டம் பெற்ற அந்த விழாவில் பேசிய சிராஜூதீன் ஹக்கானி, ஆப்கன் மக்களுக்கு எதிராக செயல்படும் தாலிபன் பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றிய பின்பு முதன்முதலாக வெளியான சிராஜூதீன் ஹக்கானியின் புகைப்படம் தற்போது அதிப்படியானவர்களால் பகிரப்பட்டுவருகிறது.