போதையில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவிகள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் மது போதையில் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து மறுதேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளி சென்றனர். தேர்வு முடிந்ததும் மூன்று மாணவிகளில் ஒருவரின் ஆண் நண்பர் ஒயின் வாங்கி கொடுத்துள்ளார்.
அதில் ஒரு மாணவி ஒயின் அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றதாகவும் மற்ற இரு மாணவிகள் ஒயின் அருந்திவிட்டு பேருந்தில் பசுபதிபாளையம் சர்ச் கார்னர் பகுதிக்குச் சென்று அங்கு வாந்தி எடுத்து மயக்க நிலையில் கிடந்தனர். அதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவிகளுக்கு அறிவுரையும் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இன்று போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கவிருக்கும் நிலையில் கரூரில் நடந்த இந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.