முக்கியச் செய்திகள் தமிழகம்

வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு

மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வேண்டாம் போதை வாசகங்கள் ஒட்டப்பட்டு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ், அன்புபாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் இன்று ஆட்டோ மூலம் போதைக்கு எதிரான விப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மன்னார்குடி கீழ ராஜா வீதியில் நடைபெற ஆட்டோ பேரணியை மன்னார்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 திற்க்கும் மேற்ப்பட்ட ஆட்டோக்களில் “வேண்டாம் போதை” ” SAY NO TO DRUGS” எனும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மன்னார்குடி நகரின் பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக சென்றது. முன்னதாக போதை பழக்கத்தால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் மன்னார்குடி ரோட்டரி சங்க தலைவி மீனாட்சி சூரிய பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வேண்டாம் போதை” விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலம் மன்னார்குடி முழுவதும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். “வேண்டாம் போதை” எனும் வாசகத்தை வெறும் விளம்பரமாக பார்க்காமல் விழிப்புணர்வாக எடுத்து கொண்டு மக்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என கேட்டுகொண்டார்.

பின்னர் பேசிய மன்னார்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம்,  இராமாயணத்தில் சீதையை கண்ட அனுமன் ராமனின் மனம் வருந்த கூடாது என்பதற்காக “கண்டேன் சீதையை” என சென்னதை போல் ஒரு அருமையான தலைப்பு “வேண்டாம் போதை ” எனும் வாசகம். நம்மை பார்த்து பிறர் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும். இதற்கு காவல் துறையும் என்றும் உறுதுணையாக இருக்கும். நல்லவைகளுக்காக சேரும் கூட்டத்தை விட போதை போன்ற கெட்டவைகளுக்காக கூட்டம் சேர்க்கின்றது. எனவே கெட்டவர்கள் நல்லவர்களாக வேண்டும் நல்லவர்கள் ஒன்று சேர்ந்து மது போன்ற போதையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

G SaravanaKumar

திமுக கூட்டணி: தலைமைதான் முடிவெடுக்கும் – கே.எஸ்.அழகிரி

Halley Karthik

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

EZHILARASAN D