தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

தந்தை கண்முன்னே தடுப்பணையில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டினார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில்…

தந்தை கண்முன்னே தடுப்பணையில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டினார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த முருகன்-மகாலட்சுமி தம்பதியின் மகன் திவாகர் (12). திருப்பூர் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.  தந்தை திருப்பூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோவிலுக்கு திருவிழாவிற்காக மே 18ம் தேதி சென்றுள்ளார்.
மே 19 ம் தேதி திருவிழா முடிந்து அனைவரும் தமிழக ஆந்திர எல்லை பகுதியான கனகநாச்சியம்மன் ஆலயம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர்.  அப்போது முருகனின் மகன் திவாகர் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். உடனே அவரது  உறவினர்கள் திவாகரை மீட்டு ராமநாயக்கன்பேட்டை பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு மருத்துவர் இல்லாமல் செவிலியர்களே தாமதமாக சிகிச்சை அளித்துள்ளனர்.  அங்கிருந்து அரசு ஊர்தி மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் திவாகர் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் தனது மகனை காப்பாற்ற முடியவில்லை என பெற்றோர்கள், உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.