சென்னை மணப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20 போட்டி துவக்கம்!

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா  சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை மணப்பாக்கம் அருகே உள்ள ”த்ரோட்டில்” ஸ்போர்ட்ஸ்  அகாடமியில்…

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா  சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர்
நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை மணப்பாக்கம் அருகே உள்ள ”த்ரோட்டில்” ஸ்போர்ட்ஸ்  அகாடமியில் நடை பெற்றது.

இந்த தொடரில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவின் மாநில அணிகள் பங்கேற்கின்றன. ஆறு லீக் ஆட்டம் மற்றும் ஒரு இறுதி போட்டி நடைபெறும் இந்த தொடர் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் துவக்க விழாவில் ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட், ராகுல் சரத்குமார்,  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர்
விக்ரம் ஜாங்கிட், செயலாளர் வீரராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த விழாவில், தொடரின் கோப்பை மற்றும் தமிழக அணியின் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள், கடந்த 15 வருடங்களாக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கடுமையாக போராடி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் விளையாட்டை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அனைவரும் இதற்கு உதவிகளை அளித்து இதற்கு அங்கிகாரம் அளிக்க வேண்டும் என கூறினார்கள்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.