நீதிமன்றத்தில் புகுந்த பாம்பு | அரண்டு போன ஊழியர்கள்!!

கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்திற்குள் பாம்பு  புகுந்ததால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.  கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையில்   நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அப்போது,…

கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்திற்குள் பாம்பு  புகுந்ததால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. 

கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையில்   நீதிபதி சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஊழியர்  கேபினில் பாம்பு ஊர்ந்து சென்றது.

நல்ல பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த சாட்சியாளர் கூச்சலிட்டார். இதை தொடர்ந்து பாம்பு புகுந்ததை தெரிந்து கொண்ட ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் நபரை வரவழைத்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின் பாம்பை பிடித்தனர்.

இதனால் ஒரு மணி நேரம் நீதி மன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.