விறுவிறுப்புடன் நடைபெறும் தெலங்கானா தேர்தல் | வரிசையில் நின்று வாக்கு அளித்த அரசியல் தலைவர்கள் & திரைப் பிரபலங்கள்!

தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்,  அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்தார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி  வாக்குப்பதிவு,  நடைபெற்று வருகிறது.  ஒரே…

தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்,  அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்தார்.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி  வாக்குப்பதிவு,  நடைபெற்று வருகிறது.  ஒரே கட்டமாக   தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சிந்தாமடகா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அதே வாக்குச் சாவடியில் அவருடைய மனைவி ஷோபா ராவும் வாக்களித்தார்.

தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஜனநாயக கடமையாற்றினர்.

மேலும்,  தெலங்கானாவில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.  சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அல்லு அர்ஜுன்,  ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன் ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவண் கல்யாண் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் நிதின் ஆகியோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.