நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடிக்கும் புதிய படம் “மகுடம்”. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் அஞ்சலி, துஷரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள “மகுடம்” திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான குத்துப் பாடல் “நாச்சிந்தி மச்சானே” இன்று மாலை 7 மணிக்கு வெளியாகயுள்ளது. மங்லி மற்றும் வேல்முருகன் பாடியுள்ள இப்பாடல், ரசிகர்களை தியேட்டரில் நடனமாட வைக்கும் ஒரு எனர்ஜடிக் கொண்டாட்டப் பாடலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது….




