முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்

தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மண்டல அளவிலான 10 மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு திட்டப் பணிகளின் செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நிதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார் நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் பச்சையாற்றின் குறுக்கே தமிழாகுறிச்சி என்ற இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணையை, பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார் தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை பொன்னாக்குடி பகுதியில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியல் கடந்த 10 வருடம் எந்த அதிகாரிகளும் வேலை செய்யவில்லை. அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டது. அமைச்சரவை பதவியை ஏற்றபின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. இந்த நதிநீர் இணைப்புத் திட்டபணி, நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்டது. . நான் ஆரம்பித்ததை நானே திறக்கவேண்டும் என விட்டுவிட்டார்கள் எனக் கூறினார்.

அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.நதி நீர் இணைப்பு திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளது. 3 ம் பகுதி 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.4 ம் பகுதி 58% பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் முழுமையாக மார்ச் 2023 ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

இந்த நகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைச் தலைவர் அப்பாவு , முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ,அரசு அதிகாரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூட்டுறவு துறையில் அரசியல் சார்ந்தவர்கள் இருக்கலாம், அரசியல் இருக்கக் கூடாது -அமைச்சர் எ.வ வேலு

EZHILARASAN D

வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு

Web Editor

நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு

EZHILARASAN D