முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கோவிட் – 19 சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது போல, தொடர் மின் சுற்று கருவி (Ring Main Unit) கீழ்கண்ட 7 மருத்துவமனைகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனைகள்: ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரானா தடுப்பூசி மையம், குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர், அரசாங்க மருத்துவமனை, பெரியார் நகர் கொளத்தூர், கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவனை, சேப்பாக்கம், கிங்ஸ் இன்ஸ்டியூட், கிண்டி, சானிடோரியம் டி.பி மருத்துவமனை, தாம்பரம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கே.கே. நகர்.

இந்த மருத்துவமனைகளில் தலா இரு மின்வழித்தடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்வழித்தடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதிகபட்சமாக மூன்று விநாடிகளிலேயே தானாகவே (Auto Change over) தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கருவியின் மூலம் மற்றொரு மின்வழித்தடத்தின் வாயிலாக மின்சாரமானது தொடர்ச்சியாக இந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

இதன் மூலம் எவ்வித அசாதாரண சூழலிலும் தங்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்கும். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரு நாள் ஊராட்சி மன்றத் தலைவர் ; ஐந்தாம் வகுப்பு மாணவி பதவியேற்பு

Web Editor

முதலில் விருது கொடுத்தது  நியூஸ்7 தமிழ் தான் – அனிதா பால்துரை நெகிழ்ச்சி

EZHILARASAN D

போதிய அளவு தக்காளி பயிரிடாததே விலை ஏற்றத்திற்கு காரணம்; விவசாயி வேதனை

Halley Karthik