காச நோய் இல்லா தமிழகம் என்பதே இலக்கு என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஓமந்தூரர் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
சிஐஐ-இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவமனைகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
காசநோய் பாதிப்பிற்குள்ளானவர்களை கண்டறிந்து குணப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. காச நோய் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருந்து எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம்.
எனவே இந்த தொடர் ஊட்டச்சத்து ஆதாரவை கொடுக்க சிஐஐ முன் வந்துள்ளது. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் ஆண்டு தோறும் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.
இனி வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் 50 நபர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான நீதிமன்ற தீர்ப்பு கடந்த வாரம் வந்துள்ளது. 150 வருடங்களுக்கு பிறகு 50 தமிழகத்தை சேர்ந்தவர்கள் பயில இருக்கிறார்கள்.
தற்போது உள்ள 10,425 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோடு கூடுதலாக 50 இடங்கள் கிடைத்துள்ளது. வருகின்ற சனிக்கிழமை எழும்பூரில் 66 கோடியில் கட்டப்பட்ட கண் மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்.
திமுக ஆட்சியின் ஒரே ஆண்டில் 1,055 கிலோமீட்டர் புதிய மழை நீர் வடிகால் பணி மற்றும் 1,078 கிலோமீட்டர் சித்தலமடைந்த மழை நீர் வடிகால் சீரமைப்பு பணி என 2 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் நடைபெற்று வருகிறது.
மழை நீர் வடிகால் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. பருவ மழை தொடர்ச்சியாக பெய்து வந்தாலும் டெங்கு மலேரியா தமிழகத்தில் காட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.








