முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம், உண்மை குற்றவாளிகள் யாராக இருந் தாலும் தப்பிக்க முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், உலகின் முன்னணி இதழ்கள் போற்றக்கூடிய விதத்தில் திமுக ஆட்சி முன்னேற்றத்தை நோக்கியே போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆட்சியில் வன்முறை இல்லை, சாதிச்சண்டைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, துப்பாக்கிச்சூடு இல்லை எனக் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது என்றும் ஜெயலலிதா மரணத் தின் மர்மங்கள் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆவடி, தாம்பரம் தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதி, மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நவீன வழிமுறைகளை கொண்டதாக காவல்துறை மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். டிஜிபி சைலேந்திர பாபுவின் நியமனம் பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படை யிலேயே நடைபெற்றுள்ளது எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்வது விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். மேலும், கோடநாடு வழக்கை நடத்துவோம் என்றும் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

குற்றாலீஸ்வரன் தொடங்கிய புதிய அகாடமி

Halley karthi

அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!

Vandhana

பண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டு

Gayathri Venkatesan