முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 

சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு என்பது நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாக தெரிவதாகக் கூறினார். மேலும், நீட் தேர்வு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவுகளும் தகர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.  மருத்துவ மாணவர்கள் கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வான நீட் தேர்வு, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்ப்பதாகவும், சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிப்பதாகவும் தெரிவித்த அவர், சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பினை நிலைநிறுத்தவும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த மசோதாவிற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். இதையடுத்து நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

Advertisement:
SHARE

Related posts

திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

Jeba Arul Robinson

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

Halley karthi

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு கோவில் திறப்பு!

Niruban Chakkaaravarthi