செய்திகள்

ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டலை எதிர்ப்பதுதான் – திருமாவளவன் எம்பி பேச்சு

ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பதுதான் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
நடத்தும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி அண்ணா
சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம் நடைபெற்றுது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் த.அறம், கலி.பூங்குன்றன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையும் படியுங்கள்: 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்ததாவது..

” நம் முன்னோர்கள் காலம் முதல் தற்போது வரை  கடந்த பத்து ஆண்டுகளாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை  திணித்து தான் வருகின்றனர். வரும் தலைமுறையில் கூட இந்த திணிப்பு தொடரலாம்.

உலகம் முழுவதும் ஆங்கில மொழி பேசுவதற்கான காரணம் அவர்கள் பல பகுதிகளை ஆட்சி செய்ததுதான். இந்தியாவில் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. அதுமட்டுமின்றி எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் 1000 மொழிகள் உள்ளது.

ஜனநாயகம் என்பது ஒரு கருத்தியல் தான். ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பதுதான். இன்றைய தலைமுறையில் எட்டு கோடி பேர் தமிழ் மொழி மொழியை பேசுகின்றனர்.

தெலுங்கு மற்றும் கன்னடம் மொழியை ஐந்து கோடி பேர் பேசுகின்றனர். ஆனால் மிக சொற்பமான நபர்கள் மட்டுமே பேசும் இந்தி மொழியை அவர்கள் எல்லாத் துறைகளிலும் திணித்து வருகின்றனர்.

இந்தியை விட சமஸ்கிருதம் தான் மிக முக்கியமான மொழியாக அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் மொழியை காப்பதை தாண்டி ஜனநாயகத்தை காப்பது தான் நமக்கு முக்கியம். சனாதன தர்மமே மொழி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருதுகிறார்  . இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு அவர்களின் மொழி திணிப்பு அல்ல அவர்களின் ஆதிக்கத் திணிப்பு.

ஆட்சி அதிகாரம் இருக்கிறது எனும் ஒரே காரணத்தினால் மறைமுகமாகவும்
வெளிப்படையாகவும் அவர்களின் மொழியினை தினிப்பது ஜனனாயக உரிமைகளுக்கு
எதிரானது.

தகவல் தொழில்நுட்பத்தையும் , ஆட்சியையும் பயன்படுத்தி மொழி திணிப்பை
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் செய்கின்றனர்.ஒரே மொழி , ஒரே கலாச்சாரம் எனும் அவர்களது திட்டத்தை நடத்த இதைப்போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனை  விடுதலை சிருத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது” என திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜபக்ச மீண்டும் பிரதமரா? – இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்

Web Editor

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அதிரடி கைது!!

Web Editor

’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகா

Gayathri Venkatesan