குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் கோர தாண்டவத்தின் தாக்கம், 3 வாரங்கள் ஆகியும் குறையாத நிலையில், உலகின் பல பகுதிகளிலும் சமீபகாலமாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் குஜராத், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது அங்கங்கே நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில நாட்களுக்கு முன்புகூட இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்,
இன்று காலை மராட்டியம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அதனை தொடந்து இன்று பிற்பகல் 3:21 மணி அளவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் ராஜ்கோட்டில் இருந்து 270 கிமீ தொலைவில், சுமார் 10 கிமீ ஆழத்தில் நிகழ்ந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த வாரம், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவிலான இரண்டு சிறிய நில அதிர்வுகள்
பதிவாகி இருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக இந்த நில அதிர்வு நடந்திருப்பதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா