குடிபோதையில் ரகளை செய்த 6 பேர்; தேடும் காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு குடிபோதையில், சாப்பிட்ட உணவிற்கு காசு கொடுக்காமல் 6 பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரை அடித்து உதைத்து ரகளை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு குடிபோதையில், சாப்பிட்ட உணவிற்கு காசு கொடுக்காமல் 6 பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரை அடித்து உதைத்து ரகளை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நள்ளிரவு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிற்றுண்டி கடைகள் திறப்பது வழக்கம் நேற்று நள்ளிரவு பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டலில் 6 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்து சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வெளியே போனபோதும் கடைக்காரர் அவர்களிடம் காசு கேட்டதால் அந்த கும்பல் கடை ஊழியரை சேரால் தாக்கியதோடு கடையில் புகுந்து ரகளை செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்கச் சென்றபோது அங்கு காவலர்கள் யாரும் இல்லாததால் அந்த கும்பல் மீண்டும் புறக்காவல் நிலையம் முன்பு கடை ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
இது ஒரு குறித்து கடை நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் 6 பேரையும் தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் பேருந்து நிலையப் பகுதியில் போலீசாரின் நடமாட்டம் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.