வருகின்ற 19-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரி வலம் வரவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
17.11.2021 பிற்பகல் 1 மணி முதல் 20.11.2021 வரை பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்க்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,
தேரோட்ட விழாக்கள் இந்த ஆண்டும் சென்ற ஆண்டை போன்று கொரோனா பெரும் தொற்று காரணமாக ஆகம விதிகளின்படி கோவிலின் வலாகத்திலே நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெளிமாவட்ட மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்திட திருக்கோவில் இணைய தளமான (www.arunachaleswarartemple.tnhrce.in) வாயிலாக இணையதள முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல் நாளை 6-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







