முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த கட்டுமர படகுகள்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் கட்டுமர படகுகள், தேசிய கொடிகளுடன் கடலில் அணிவகுத்த நிகழ்வை, முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் மீனவர் நலத்துறை சார்பில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 இயந்திரம் பொருத்திய கட்டுமர படகுகள், கடலில் தேசிய கொடிகளுடன் அணிவகுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மீனவர்கள் தங்களின் கட்டுமரப்படகில் தேசியக்கொடி ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர். இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் அருகே 75 இயந்திரம் பொருத்திய கட்டுமர படகுகளில் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மீனவர்கள் தங்களின் கட்டுமரப்படகில் தேசியக்கொடி ஏந்தியவாறு படகுகள் அணிவகுப்பில் புதுச்சேரி கடற்கரையோரம் வளம் வந்த காட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement:
SHARE

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

Vandhana

வேளாண் மசோதாக்களை எரித்து ‘ஹோலி’ கொண்டாடிய விவசாயிகள்!

Halley karthi

2021 தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வணிகர்களுக்கு ஐந்து தொகுதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை!

Jeba Arul Robinson