தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை!
இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.
தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!
சங்க கால மாலுமிகள் தமிழர் வர்த்தகத்தை கடல்களைக் கடந்து கொண்டு சென்றனர். இன்று, திராவிட மாடல் தெற்கு தமிழ்நாட்டை கப்பல் கட்டும் உலக வரைபடத்தில் இடம்பிடித்து, வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







