முக்கியச் செய்திகள் இந்தியா

3 நாட்களாக நடந்து வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்

மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மத்திய விளையாட்டு அமைச்சர் ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். லக்னோவில் நடக்கும் பயிற்சி முகாமில் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளிடம் அத்து மீறி நடக்கும் போக்கு சில ஆண்டுகளாக தொடருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எதிர்த்து கேட்டால் மிரட்டுகிறார்கள்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தினை உடனடியாக கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டியும், தலைவர் பதவியை, பிரஜ் பூஷன் ராஜினாமா செய்ய கோரியும், மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவுடன் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி கடிதம் சமர்ப்பித்த வினேஷ் போகத் தரப்பில் விரிவான விளக்கம் பெற வேண்டி 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

இருப்பினும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலையில் போராட்டம் நடந்து வந்ததை அடுத்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் போராட்டத்தில் ஈடுப்பட்ட விளையாட்டு வீரர்களை சந்தித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், எங்களது கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து நியாயமான விசாரணை நடைபெறும் என நம்புகிறோம், எனவே போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இந்தியா முழுவதும் விரிவாக்கம்

EZHILARASAN D

கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

Halley Karthik

கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!