முக்கியச் செய்திகள் தமிழகம்

விலை ஏற்றம் தான் திராவிட மாடல் ஆட்சியா? இபிஎஸ் கேள்வி

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலையேற்றம், பால்விலை உள்ளிட்ட பல பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஒரே அரசாங்கம் அதிமுக. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்துள்ளோம். நாம் கொண்டு வந்த திட்டத்தை இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் கட் பண்ணி திறந்து வைத்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை ஏழு சட்டக் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே முதல் உயர் கல்வி படிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அதிமுக தான் காரணம். திமுக ஒரு திட்டமாவது கொண்டு வந்துள்ளதா? நான் முதலமைச்சராக இருக்கும் போது கொண்டு வந்த முதியோர் உதவி திட்டமானது தற்போது திமுக ஆட்சியில் பல பேருக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. திருமண உதவி திட்டத்தில் ஒரு பவுன் திட்டத்தையும் கைவிட்டு விட்டனர்.

பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 பணம் கொடுத்தோம். 21 பொருட்கள் கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக இருந்தது. மின்சார கட்டணம் திமுக ஆட்சியில் அமோகமாக ஏறிக்கொண்டே போகின்றன. அதிமுக ஆட்சியில் தடை இல்லாத மின்சாரம் கொடுத்தோம். மின் கட்டணத்தையும் ஏற்றி, மின்சாரமும் கொடுக்கவில்லை இந்த திராவிட மாடல் ஆட்சியில் என்று கூறினார்.இந்த ஆட்சியில் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் கஞ்சா விற்காத இடமே இல்லை. போதை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வரும் அப்பொழுது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டுமான பொருட்கள் அனைத்து விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசாக திமுக உள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆனபிறகும், இதுவரை நிறைவேற்றவில்லை.

தேர்தலின் போது ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அதேபோல சிலிண்டருக்கு மாதம் நூறு ரூபாய் மானியமாக தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. இதுபோன்ற பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D

உயர்கல்வி உறுதித் திட்டம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Arivazhagan Chinnasamy

நியூஸ் 7 தமிழின் நிகழ்ச்சி பிரிவு தலைவர் ஷண்முகம் காலமானார்; முதலமைச்சர் இரங்கல்

G SaravanaKumar