தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 114 நாட்களில் இந்த ஆட்சியில் பல குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
சேலத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர், 13 வயது சிறுமி போதை பொருள் பயன் படுத்தி உள்ளார், பாலியல் வழக்கு அதிகரித்து வருகிறது, அரசு வழக்குகளை சரியாக கையாண்டு குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். விவசாயிகள் பம்ப் செட் வைத்திருக்கிறார்கள், அதை திருடி சென்று விடுகிறார்கள், காப்பர் வயர் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. ஆடு மாடுகளை திருடிச் செல்லும் வகையில் சூழல் உருவாகி இருக்கிறது.
காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் கொடுத்தால் புகாரை பதிவு செய்யாமல் உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பு எனது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ரிங் வாட்டர் வயர்களை அறுத்து எடுத்து சென்று விட்டனர். முதியவர்கள் தனியாக வசிக்கும் பகுதிகளில் தேர்வு செய்து கொள்ளையர்கள் அவர்களை தாக்கி உடைமைகளை எடுத்து செல்கிறார்கள், இன்று ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையாகிறது 5 பவுன் பறித்து சென்றாலே அவர்கள் வசதி ஆகிவிடுவார்கள், முதியவர்களை குறி வைத்து இது போன்ற சம்பவமம் கொங்கு மண்டலத்தில் நிறைய நடந்திருக்கிறது.
தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதியவர்களை தாக்கியும் கொன்றும் கொள்ளை அடித்துள்ளனர். பெல் அடித்தால் வேற மாதிரி இருக்கிறது, நானே ஆறாவது நபராக பேசுகிறேன். ஏழை எளிய மக்கள் சீட்டில் பணம் கட்டி ஏமாந்து நிற்கிறார்கள், தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்பதற்காக சீட்டு பணம் செலுத்தி ஏமாந்து வருகிறார்கள். இனி அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போதுமான அளவு அரிசி கடத்தலை தவிர்ப்பதில்லை. அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் கடத்தலை தவிர்க்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்கு போராட்டங்கள் நடத்த தங்கு தடையின்றி அனுமதி கொடுத்தோம். 40 ஆயிரம் போராட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். நேற்று இரு வழக்குகளில் நிரபராதி என தீர்ப்பு வாங்கி வந்தேன். தலைவர்கள் பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தினால் வழக்கு பதிகிறீர்கள். மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவே போராட்டம் நடத்துகிறோம். நியாயமான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தி
116 நாட்கள் ஆகிவிட்டது. போராட்டங்கள் அதிகரித்துள்ளன. விவசாயிகள், மருத்தவர், தூய்மை பணியாளர், அரசு ஊழியர் என பலரும் போராட்டம் போராட்டம் நடத்துவோரை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது ஒருவர் வண்டலூர் மேம்பாலத்தில் அவரைக் கீழே தள்ளி தங்கச் செயினை பறித்து விட்டு சென்று விட்டார், பட்டப் பகலில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன இதுபோல நிறைய இருக்கிறது. ஒரு மாநிலத்தின் சிறப்பான துறை என்றால் அது காவல்துறை தான். அதிமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் தேசிய விருதுகள் பெற்ற அரசாக திகழ்வதற்கான காரணம் காவல்துறை தான் . தற்போது காவல்துறையினர் இக்கட்டான சூழலில் பணியாற்றக்கூடிய நிலையில் உள்ளது. மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கு நாம் உதவிகரமாக இருக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை பாதுகாப்பாக இருந்தது. மூன்று ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது தண்ணீருக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் அந்த திட்டம் இட்டப்பில் போடப்பட்டது. அதனால் தான் தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அம்மா ஆட்சி காலத்தில் பல்வேறு சிறப்பு படைகள் தொடங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டது தான் அந்த சிறப்பு திட்டம். பொதுமக்கள், வயதில் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க காவல் செயலி உருவாக்கப்பட்டது. 1991 ஆண்டு தான் சீருடை பணியாளர்கள் மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் காலி பணியிடங்கள் நிரப்பினோம். கடந்த ஆட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப வில்லை. ஒவ்வொரு ஆண்டும் காவலர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். அந்த காலி பயணங்களை அவ்வப்போது நிரப்ப வேண்டும். அனைத்து மக்களை பாதுகாக்கும் கடமை காவல்துறைக்கு தான் உள்ளது. 1,18,851 காவலர்கள் தான் தற்பொழுது பணியில் உள்ளனர். 15,000 காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. குற்றங்களை தடுப்பது அரசின் கடமையாகும், குற்றங்களை தடுக்க காவலர்கள் எண்ணிக்கை போதுமாக இல்லை.
காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படும் என வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது அதனை செயல்படுத்த வேண்டும். பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபட வைக்க மாட்டோம் என வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது அதனை நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் சேலம் செல்லும் பொழுது அதற்கு முந்தைய நாள் இரவு நேரங்களில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார், அதனை தவிர்க்க வேண்டும். காவல்துறை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காவலர்களுக்கு நல மருத்துவமனை அமைக்க வேண்டும். காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க புதிய சேவை தொடங்க வேண்டும். 5 லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அம்மா ஆட்சி காலத்தில் பொருத்தப்பட்டது. சாலைகளில் உள்ள கேமராக்களில் லென்ஸ்கள் சேதம் அடைகிறது மழைக்காலங்களிலும் சேதம் அடைகிறது.
சாலையோரம் உள்ள கேமராக்கள் 24 மணி நேரமும் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து பராமரிக்க வேண்டும். சேதமாக இருக்கும் கேமராக்களில் முறையான காட்சிகள் பதிவு செய்ய முடியாது. சாலைகளில் உள்ள கேமராக்களில் லென்ஸ்கள் சேதம் அடைகிறது மழைக்காலங்களிலும் சேதம் அடைகிறது. குற்றங்களை தொடக்க அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி காட்சிகள் அமைக்கப்பட்டது. 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளின் விரிவாக்கம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் அதிக வாகன விபத்துக்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. விதி மீரல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் வசூலிக்கப்படும் பணம் முறையாக அரசுக்கு வழங்கப்படுகிறதா என்பதை குறித்து கவனிக்க வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளில் பைக் ரேஸ் நடத்துகிறார்கள். இதனால் பல்வேறு பொதுமக்கள் பாதிப்படைகிறார்கள். இதனை இந்த அரசு தடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




