திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 வாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில், “கஜானாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க; கஜானாதான் இருக்கு, அதுல ஒன்னும் இல்ல.. இருந்திருந்தா செஞ்சிருப்போம்” என வாய் நீளத்தோடு பேசியிருக்கிறார் அமைச்சர் ஆனந்த்.
அப்படியெனில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம். ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், பத்தாவது மாடியில் முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிகளுக்கு ரூ.5.54 கோடியில் டெண்டர், எம்.எல்.ஏ.க்களுக்கு கார், மேட்டூர் அணைத் திறப்பின் போது முதல்வரின் பாதுகாப்பிற்கு 5 கோடியில் இரும்புத் தடுப்பு போன்றவையெல்லாம் அரசு கஜானாவில் இருந்து எடுக்கப்படுகிறதா? இல்லை பனையூரில் இருந்து முதலமைச்சர் கொண்டு வருகிறாரா?
தினமும் பொய்களை மட்டுமே பேசி ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கும் இந்த ஜென்மங்களை எதில் சேர்ப்பது? -“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” தான். ஆனால், இவர்களுக்கு எத்தனை சூடு போட்டாலும் திருந்த மாட்டார்கள் போல!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




