சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்.…

டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சிலர் பள்ளிவாசலுக்கு வெளியே அதாவது சாலை ஓரத்தில் தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தொழுகையில் இருந்தவர்களை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். தொழுகை முடிந்ததும் அங்கிருந்த பலரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களையும் அந்த போலீஸ் தாக்கியதாக தெரிகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

https://twitter.com/HarishMali06/status/1766043447310618802?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1766043447310618802%7Ctwgr%5E98cac50aa42d5c56a3823a41c2022cab19d6d3ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fnews%2Findia%2Fwatch-video-delhi-police-kicks-men-offering-namaz-on-road-suspended-171633

இதனையடுத்து, தொழுகையில் இருந்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டம் நடந்தது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழுது கொண்டிருந்த இஸ்லாமியர்களை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இஸ்லாமியர்களை தாக்கிய விவகாரத்தில்  சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி வடக்கு டிஜிபி மனோஜ் குமார் மீனா கூறுகையில், “வீடியோவில் பார்த்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீரானது. போக்குவரத்து சேவையையும் இயல்பு நிலைக்கு திரும்பியது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.