ராஜஸ்தான் – மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயம்!

ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர். குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகா…

ராஜஸ்தானின் கோடாவில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் காயமடைந்தனர்.

குண்ஹாரி காவல் நிலையத்திற்குள்பட்ட சகடூரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு “சிவ பாரத்” ஊர்வலம் நடைபெற்றது. அதில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில், மின்சாரம் பாய்ந்ததில் 14 குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் கோட்டாவில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவருக்கு 100 சதவீத தீக்காயமும், மீதமுள்ள 12 பேருக்கு 50 சதவீத காயமும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் உயர் அழுத்த மின் கம்பியுடன் ஏற்பட்ட உராய்வில் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.