சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, குதிரைப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
இவ்விழாவில் முதலமைச்சர் விஜய், 2023, 2024, 2025 -ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட 665 காவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.
இதனைத்தொடந்ர்து,இதனைத்தொடந்ர்து, முதலமைச்சர் விஜய் கடலோர காவல்நிலையங்களிலின் கண்காணிப்பு பணிக்காக வாகனங்களை வழங்கும் நிகழ்வை கொடியசைத்தொடங்கிவைத்தார். க்கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்ட 96 இருசக்கர வாகனங்களும், 42 நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்றன.




