பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இது வரை சுமார் 34 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மீத்தேன் வாயு தேங்கியதே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணியாளர்களும் உள்ளூர் மக்களும் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியாளர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாகவும் வெடிவிபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் அரசு 500,000 பாகிஸ்தானி ரூபாய் (சுமார் $1,800) இழப்பீடு வழங்கும் என்றும் அந்நாட்டு கனிமங்கள் துறை அமைச்சர் ஷோயப் நொஷர்வானி அறிவித்துள்ளார்.




