“ஆச்சரியமாக இருக்கிறது” – சூர்யவன்ஷியின் துணை கேப்டன் நியமனம் குறித்த போக்லேவின் ரியாக்‌ஷன்..!

துலீப் கோப்பைக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக சூர்ய வன்ஷி நியமிக்கப்பட்டுள்ளது பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று துலீப் கோப்பையாகும். இது நாட்டின் பல்வேறு மண்டலங்களின் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்த நிலையில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்ய வன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஆதரவுகள் இருக்கும் அதே சமயத்தில் விமர்சனங்களையும் இந்த நியமனம் சம்பாதித்து வருகிறது.

இந்த நியமனம் குறித்து கிரிக்கெட் வர்ணைனையாளர் ஹர்ஷா போக்லே வெளியிட்டுள்ள பதிவில், “’ரெட்-பால்’ (red-ball) அணியின் துணைத் தலைவராக சூர்யவன்ஷியை நியமித்ததன் பின்னணியில் உள்ள சிந்தனை என்னவாக இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் 12 இன்னிங்ஸ்களில் 17.25 சராசரியுடன் மொத்தம் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது திறமை அபாரமானது; ஆனால், எந்தவொரு விஷயத்திலும் கற்றுத் தேறும் ஒரு காலகட்டம் உண்டு ‘ரெட்-பால்’ கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் அந்தப் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி மதிப்புமிக்க வீர்ர விருதை வென்றார். தொடர்ந்து டி 20 போட்டிகளிலும் அறிமுகமான அவர் எதிர்கால இந்திய அணியிக்கு நம்பிக்கையளிப்பவாராக உள்ளார்.

கிழக்கு மண்டல அணி: இஷான் கிஷான் (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி (துணை கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் கராமி , முகமது ஷமி, முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது, சூரஜ் ஜெய்ஸ்வால், விராட் சிங் , குமார் குஷாக்ரா , ஷிகர் மோகன், சுப்ரான்சுக் சேனாபதி , அன்ஷி சேனாபதி தாஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.