“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!

திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நத்தம்பாளையத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

சட்டப்சபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். ஆனால் பாட்டு பாடினால் என்ன செய்வது. சட்டப்பேரவைக்கு செல்வது சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றது போல் இருந்தது. முதல்வர் தொகுயிலே மின்வெட்டு நடக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கலைஞரின் பேரனாக கேட்கிறேன் திமுகவுக்கு வாக்களியுங்கள். திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். முந்தைய வாக்களிப்பின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதுகில் குத்தி குதிரைபேரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், தொகுதி வளர்ச்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.