“திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” – திருமாவளவன் பேட்டி!

தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “புதுச்சேரி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிகவிற்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு காலதாமதம் காரணமாக துவக்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவதாக கூறினோம். அதன்படி, 4 தொகுதிகளில் எங்கள் கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தோம்.

இந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். இதன்படி மற்ற 3 தொகுதிகளில் வேட்புமனுவை திரும்ப பெறமுடியவில்லை என்றாலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது என முடிவு செய்துள்ளோம். திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

புதுச்சேரியில் இடதுசாரிகள் எங்கள் அணியில் இல்லை என்பது எங்களுக்கு வருத்தம் தான், ஆனால் இது எங்களது வெற்றியை பாதிக்காது. காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடுவது என்று முடிவு செய்தேன்.
பாராளுமன்றத்தில் என்னுடைய நோக்கத்தின் படி செயல்பட முடியவில்லை. கூட்டணி நலனை பாதிக்கும் வகையிலான திட்டமிட்ட வதந்திகள் பரப்பபட்டது. எனவே கூட்டணி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியின் வெற்றிக்காக நான் விலகி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.