ஒடிசாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!

ஒடிசாவில் நேற்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 11.31 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், 18.573 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82.559 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இதனையடுத்து, மணிப்பூரில் நேற்று இரவு 11.34 மணியளவில் (3 நிமிட இடைவெளியில்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.