ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்

ரூ.3 கோடியில் செலவில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட்,…

ரூ.3 கோடியில் செலவில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட், தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு உருவாக்கப் படும்.

படித்த இளைஞர்கள், சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல் படுத்தப்படும்.

பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.

வேளாண் சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார் பாய்கள் வழங்கப்படும்; இந்த திட்டம் 52.2 கோடி செலவில் ஒன்றிய – மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.

ரூ. 3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.