முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060 ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.

’சிறுதானிய இயக்கம்’ கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள், பயிறு வகைகளை வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும் மானியம் அளித்து ஊக்கப்படுத்தப்படும்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.

இத்திட்டம் ரூ.45 கோடி ஒன்றிய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் படும்.

நடப்பாண்டில், துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டம்.

சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி கொள் முதல் செய்ய நடவடிக்கை.

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

Gayathri Venkatesan

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்

Jayasheeba

ஆந்திராவில் மர்மநோய்; ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்!

Jayapriya