கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
அவ்வாறு 2006ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியினை வளையமாதேவி கிராமத்தில் சில நாட்களுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி நிர்வாகம் துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பா.ம.க உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வீட்டிற்கு ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என தங்களது கண்டன போராட்டாங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உரிய இழப்பீடு வழங்கிவிட்டு பணியினை தொடருவோம் என என்.எல்.சி நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் இன்று கரிவெட்டி கிராமத்திற்கு நில அளவீடு செய்ய என்.எல் சி அதிகாரிகள் வந்தனர்
அதற்குப் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர் மற்றும் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வீடுகளில் இருந்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டில்களில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் அவர்களது மீது தண்ணீர் ஊற்றினார்.
அண்மைச் செய்தி : ’உடல்நிலை சரியில்லை என நீங்கள் எழுதுவது என்னை பாதிக்கிறது’ – பவர் ஸ்டார் உருக்கம்
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காதவாரு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அனைவரும் திரும்பி சென்றனர். இதனால் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.