படுத்த படுக்கையாய் இருக்கிறார், இறந்துவிட்டார், இனி இவர் அவ்வளவுதான் என நீங்கள் எழுதுவது என்னை ரொம்ப பாதிக்கிறது என பவர் ஸ்டார் வேதனையாக பேசியுள்ளார்.
சென்னை சாலிகிராமம் பிரசாத் ராபில் நடைபெற்று வரும் எவன் திரைப்படக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது: நலமாய் இருக்கிறார், படுத்த படுக்கையாய் இருக்கிறார், இறந்துவிட்டார் என என்னைப்பற்றி தகவல்களை தொடர்ந்து பத்திரிகைகளில் வந்து கொண்டே கொண்டிருக்கிறது. எப்படியோ என்னைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வருவது நன்றாக பார்க்கிறேன். தயவுசெய்து என்னைப்பற்றி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் தவறாக எழுதாதீர்கள்.
எனக்கு உடல்நிலை சரியில்லை, இனி இவர் அவ்வளவுதான் என நீங்கள் எழுதுவது என்னை ரொம்ப பாதிக்கிறது. தொலைக்காட்சியும் பத்திரிக்கையும் என்னுடைய இரண்டு கண்களாக பார்க்கிறேன். எனக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார்தான் போட்டி. வேறு எந்த ஸ்டாரும் போட்டி கிடையாது.
2008இல் திரைத்துறைக்கு வந்து இதுவரை 100 படங்களில் நடித்து விட்டேன். பிக்கப் திரைப்படம்தான் என்னுடைய நூறாவது திரைப்படம். இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் பேசினார்.







