பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் 5 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள், பாலியல் கடத்தல்காரர்கள், வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
மாநில காவல்துறை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. புதிய தவெக அரசு தனது வெற்றிக் கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவந்து, களத்தில் அரங்கேறி வரும் இந்த மோசமான உண்மைகளை எதிர்கொள்ள இன்னும் தொடங்கவில்லை என அதில் பதிவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







